Saturday, April 29, 2006

 

சோ,சுப்ரமணியசாமி கூத்துகள்.

சோ,சுப்ரமணியசாமி கூத்துகள்.

நடுநிலைவாதி என பறைசாற்றிக்கொண்டு திரிகிறார்.இவர் ஐடியா கொடுத்துத்தான் எந்த கோஷ்டி ஒன்று சேர்வது என strategy போடுவது இவர்தான். தூது செல்வதும் இவர்தான். பெரிய யோக்கியர் என ஒரு வேஷம்.
ஜெ மோசம் என ஒன்று சேர்த்து ஜெயிக்கவைத்தார். இன்று திமுக வந்தால் யாருமே தொழில் செய்யமுடியாது என பேட்டி.
தயாநிதி டாடா-வை மிரட்டியதாகவே கொள்வோம். ஆனால் ஜெ-செய்த அட்டகாசத்தை விடவா. சென்னையில் எத்தனை பேர்களின் வீடுகள் பறிபோயின. எத்தனை பேர்களின் நிலங்கள் பறி போயின.தன் தொழில் வளர்ப்பதற்காக பதவியை பயன்படுத்துவதற்கும், (இதை செய்யாதவர் எவர்) பதவியை வைத்துக்கொண்டு அராஜகம் செய்வதற்கும் வித்தியாசம் இல்லையா?
இன்று சோ ஜெவை சப்போர்ட் செய்வது. சுப்ரமணியசாமி ஜேவை மறைமுகமாக சப்போர்ட், இவர் ஜெ-வின் மீது போட்ட வழக்குகள் என்னாயிற்று. இன்று அவர்கள் போடும் பேட்டிகள் ஜெ-டிவியில்.அவரவர் களுக்கு உபயோகம் என்றால் ஏற்றுக்கொள்ளபடுவது.
அரசியலில் இதெல்லாம் சகஜமம்ப்பா? என கூறினாலும் அசிங்கங்களின் உச்சக்கட்டத்தை எட்டிகொண்டிருக்கிறோம் என்பது வேதனையாய் இருக்கிறது.

Comments:
சிட்டுக்குருவி... இன்னும் கரை தேர்ந்த தி.மு.க. கம்பெனிக்காரராக நீங்கள் ஆகவில்லை. இருந்திருந்தால் முதல் வரியிலேயே ஜெ.வை எதிர்த்து ஒன்று சேர்த்து ஜெயிக்க வைத்தார் என்றும் இன்று தி.மு.க.வை எதிர்க்கிறார் என்று எழுதுவீர்களா? ஜெ. தவறு செய்தார் என்றால் அன்றைக்கு தட்டிக் கேட்டு ஒன்று சேர்த்தார். இன்றைக்கு அதை விட தயாநிதி தவறு செய்வதால் ஜெ.வுக்கு சப்போர்ட் செய்கிறார்.

ஜெ. தவறு செய்ததால் தயாநிதி செய்வது தவறில்லை என்றாகி விடுமா?

Grow up man.
 
// தன் தொழில் வளர்ப்பதற்காக பதவியை பயன்படுத்துவதற்கும், (இதை செய்யாதவர் எவர்) //

சாமி

இது போன்ற தவறுகளை பெரிதாக எண்ணாமல் அவற்றை அங்கீகாரம் செய்ததன் விளைவுதான் இன்றும் முன்னேராத நாடாக உள்ளோம். ஜெ போன்றவர்களை ஒப்பிடும் போது சின்ன திருடர்களாக இருந்தாலும், நல்ல சமூகத்தின் எதிரிகள்தான் இவர்களும்!

நெருப்பு
 
பிடிக்கவில்லை என்பதற்காக மீண்டும் சென்று இன்னொரு அசிங்கத்தில் விழுவது தான் சகிக்க முடியவில்லை. மு.க வை விட ஜெ-சசி பெட்டர் என முடிவு செய்திவிட்டீர்கள் போல். கால்ல் விழுவதுதான் ஸ்ரீஇன்னு சொன்னா செய்ங்க.
 
Post a Comment

Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?