Thursday, April 27, 2006

 

விஜய்காந்தை நம்புவோமாக

உலகமே வியக்கும் ஒரு கல்யாணம். எண்ணிக்கையில்லா நகை,சொத்து. இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது. இப்படி எல்லாம் சொல்லிட்டு இன்று அம்மா அம்மா என்று எல்லோரும் கூப்பிடிவதை பார்த்தா வெட்கமாக இருக்கிறது.
எல்லோரும் சுயநிலவாதிகள்.
துக்ளக் -சோ பண்ணும் அட்டகாசத்திற்கு அளவேயில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் யாரும் தொழில் பண்ண முடியாதாம். சுப்ரமணியசாமி பண்ணும் கூத்துக்கு அளவேயில்லை. ஜெயாவின் பாசிச ஆட்சியை ஒழிப்போம் என நடைநடையாய் சென்று விட்டு அவரின் ஆட்சி பொற்காலம் என கூறுவது. தன் கணக்கு தீர்ந்தவுடன் எதிரணி சேர்ந்த விசு.என்னை அவமான படுத்தி விட்டார்கள் என கூட்டி சேரும் சரத். என் கட்சியை பெரிதாக்க கூட்டு என கும்மாளமிடம் திருமா. ஜாதிய ரீதியாக பத்திரிக்கைகள் ஒன்று சேர்ந்து சப்போர்ட். (பத்திரிக்கை காரர்களுக்கு செய்த கொடுமைகள் மறந்து போய்விட்டன) பொற்கால ஆட்சி கொடுப்பார்களாம். தங்க தமிழர்களாம்.அராஜக ஆட்சி. அரசு ஊழியர்,காஞ்சி அரஸ்ட்.
இந்த பக்கம் குடும்ப அரசியல். ஒட்டுக்காகவே கூறப்படும் திட்டங்கள். தன் குடும்பத்தை முன்னில படுத்தி கட்சியை பின் தள்ளியது. என்ன் செயதாலும் மாநில ஆட்சியை கிண்டல் செயவது . சரியான ஒத்திழையாமை. மரத்தை வெட்டி கட்சி வளர்த்த கட்சி. கோஷ்டி பூசலைத்தவிர வேரொன்றும் தெரியாத கட்சி.
ஆனால் தேர்தல் கூட்டத்திற்கு வரும் கூட்டத்தை பார்த்தால். மக்களை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. புதிய எழுச்சி வர வேண்டும் என ஆசை.ஆனால் நிறைய பேருக்கு விஜய்காந்த் மேல் நம்பிக்கையில்லை. கொடுத்துதான் பார்ப்போமே. ஒரே நம்பிக்கை,ஒரு மாற்றம் வரட்டுமே. எத்தனை காலம் தான் கழகம் என ஏமாற்றப்படவேண்டும். இவன் மட்டும் வந்து என்ன செய்திவிடுவான் என்று தெரியாமலேயே ஒதுக்கி இன்னோரு முறை கழகங்களை உட்கார் வைத்து இதே அசிங்கங்களை சந்திக்க வேண்டுமா?
ரஜினிக்கு தான் தைரியமில்லை. ஆனால் விஜ்யகாந்த் அப்படி ஒன்றும் தவறான மனிதனாக த்ரியவில்லை. மேலும் விஜய்காந்தை விட்டால் நமக்கு வேறு புதிய எழுச்சிக்கு சான்ஸே யில்லை. மீண்டும் மீண்டும் ஜெ அல்லது ஸ்டாலின் அல்லது வளர்ந்து வரும் ராமதாஸ். போதும்டா சாமி.
பகிரங்கமாக சொல்கிறேன் விஜய்காந்திற்கு ஒர் சான்ஸ் கொடுப்போமே. என்ன் கிழிப்பான் என கேட்கலாம் உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனால் இரண்டு கழகங்களை விட நன்றாக இருக்கும் என்பது அப்பட்டமான உண்மை.

Comments:
விஜயகாந்தை நம்பலாம் சரி...அவரிடம் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி எப்படி ஆட்சியை கொடுப்பது...

இது என்ன காஷ்மீர் தீவிரவாதிகளை பக்கம் பக்கமா லியாகத் அலிகான் வசனத்தையும் புள்ளி விவரங்களையும் பேசி கொல்லற விஷயமா ?? ( அதுவும் தமிழ் ல ஹி ஹி )

2011 ல வேனா விஜயகாந்தை நம்பலாம்... ( அப்ப தனுஷ் கட்சி ஆரம்பிக்கரேன் னு அடம் புடிப்பார்..சிம்பு, கலைஞர் என்னோட குரு அப்படின்னு அ(று)றிவிப்பார்..அஜீத் ஏதாவது ஒரு சாதி கட்சியோட தமிழக தலைவரா மல்லு கட்டுவார்..விஜய் ஸ்டாலின் மகன் உதய நிதிக்கு முடிசூட்ட பாக்கறாங்கன்னு தி.மு.க வில இருந்து விலகி அ.தி.மு.க வில சேருவார் ( சங்கீதா முகத்துல சுரத்தே இருக்காது ஹி ஹி )

அதனால இப்ப விட்டுடுவோம் அவர..
 
விஜயகாந்தை நம்பலாம் சரி...அவரிடம் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி எப்படி ஆட்சியை கொடுப்பது.../

ஓ.பி.எஸ் டீக்கடை வெச்சு நடத்திட்டு இருந்தவர்.முன்னாள் ரயில்வே மந்திரி ஏகே மூர்த்தி ரயில்நிலையத்துல கடை வெச்சிருந்தவர்.

சாராயம் காய்ச்சறவன், எல்லாம் ஆட்சியை பிடிக்கறான்.விசிலடிச்சான் குஞ்சு புடிச்சா என்ன?எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடிச்சப்பவும் இப்படித்தான் சொன்னாங்க.
 
அய்யா ரவி ஜெ -வையே உட்கார வைத்து அழகு பார்த்துட்டோம். சந்தோஷமா சசிக்கு அள்ளி கொடுத்திட்டோம் அதை விடவா கொடுமையா இருக்கப்போவுது.
 
http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_14.html
 
paarkka
www.aaththigam.blogspot.com
 
Post a Comment

Links to this post:

Create a Link<< Home

This page is powered by Blogger. Isn't yours?