Monday, April 24, 2006

 

கலைஞருக்கு ஒரு கேள்வி

சமீபத்தில் இஸ்லாமிய மதத்தினை கிண்டல் செய்து ஒரு கார்ட்டூன் மிக பெரிய போரட்டத்தை எற்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே. இரு பகக நியாயங்களும் (கருத்து சுதந்திரம், மத மதிப்பு) த்ங்கள் காரணங்களை நியாயபடுத்தினா. இங்கே கலைஞ்ர் அவர்கள் மகாபாரதத்தில் இருந்து பாஞ்சாலி பாத்திரத்தை கொச்சை படுத்தி முரசொலியில் எழுதியிருந்தது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம். யாருமே இதை பொருட்படுத்த வில்லை. ஏன்? ஒரு வேளை தமிழில் எழுதியதால் யாரும் கண்டுகொள்ளவில்லையோ?. இதே கலைஞரால் ஒரு குரானிலோ அல்லது பைபிளிலிருந்தோ ஒரு வாக்கியத்தை கிண்டல் செய்து எழுத துணிச்சல் இருக்குமோ. என்ன இந்து சமுதாயத்தை கிண்டல் செய்தால் கேட்க யாருமில்லை என்ற எண்ணம் தானே? எழுத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இந்து மத இதிகாசத்தில் இருக்கும், ஒரு பாத்திரத்தை கிண்டல் செய்வது யார் என்று தான் பார்ர்க்க வேண்டும். வயதானவர்களை பார்க்கும் போது இயல்பாகவே மதிப்பு வரும். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு maturity கொடுத்திருக்கும். ஆனால் 80 வயது தமிழ் வளர்க்கும் தலைவருக்கு, குறளோவியம் எழுதிய கலைஞர் ஏன் இப்படி அவர் தரத்தை அவரே தாழ்த்திக்கொள்கிறார்?

Comments:
//இங்கே கலைஞ்ர் அவர்கள் மகாபாரதத்தில் இருந்து பாஞ்சாலி பாத்திரத்தை கொச்சை படுத்தி முரசொலியில் எழுதியிருந்தது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம். யாருமே இதை பொருட்படுத்த வில்லை. ஏன்? ஒரு வேளை தமிழில் எழுதியதால் யாரும் கண்டுகொள்ளவில்லையோ?. இதே கலைஞரால் ஒரு குரானிலோ அல்லது பைபிளிலிருந்தோ ஒரு வாக்கியத்தை கிண்டல் செய்து எழுத துணிச்சல் இருக்குமோ.//

பார்த்தீங்களா.. வம்புக்கு வர்றீங்களே..

மகாபாரத்தை கிண்டல் செய்தால் உடனே குரானையும் - பைபிளையும் கிண்டல் செய்ய வேண்டுமென்பது கட்டாயமா..?

மத உணர்வுகள் - கடவுள் நம்பிக்கைகள் எங்கு புண்படுத்தப்பட்டாலும் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் பட்சத்தில் அந்த பத்திரிக்கைகள் கிண்டல்செய்ததால் எதிர்த்தோம். அதுபோல தங்களுடைய மதஉணர்வுகள் புண்படுத்தப்பட்டால் கண்டிப்பாக தாங்கள் போராடியிருக்க வேண்டும். அது உங்களுடைய தவறுதான்..
 
i accept Nilau nanban's comment. Unless until people understand and respect the hindu religion, karunanithi will write anything about hindu. we need to show our feelings in the elections.
 
என்ன! குத்துக்கரணமடித்து!; நான் இந்து மதத்தவன் இல்லை என கருணாநிதி கூறினாலும்; அவர் அடிப்படையில் ஓர் இந்து; இன்னும் இந்துவே!!!!!!;அவரால் எவ்விதத்திலும் இனி வேற்று மதத்தவனாகவும் மாறமுடியாது, வேண்டுமானால் கைலியைத் தலையில் கட்டிக்கொண்டு; வயிறாற "ரம்ழான்" கஞ்சி" குடிக்கலாம். நிச்சயம் அவர் இஸ்லாத்தைத் தழுவி; "சுன்னத்துச்" செய்யப் போவதில்லை. கத்தோலிக்க மதத்துக்கு மாறி "ஞானஸ்தானமும்" பெறப் போவதில்லை.இப்படியே மதமில்லையென பாவா காட்டி காலத்தைக் கழிக்கவேண்டியதே!இந்து மதத்துள் இருந்து கொண்டு பலர் அதற்கே ;கேடு செய்வது போல்; இவரும் "மஞ்சள்" துண்டைப் போட்டுக் கொண்டு; எதேதோ எழுதிக் காலத்தையோட்டுவார்.இவற்றைப் பெரிது படுத்தி. இவர்களுக்கு இலவச புகழ் தேடிக் கொடுக்க வேண்டாம். அத்துடன் நமது இந்து மதத்திலும் காலத்துக் குதவாத பல; பிரிவினைகள் மனித நேயத்தையே கேள்விக் குறியாக்கிறது.அதற்கு இந்து மதத்தின் ஏகபிரதிநிதி எனும் சங்கராச்சாரியும் துணை போவதும் ;நம்மால் புரிந்துணரப் பட்டுத் தவிர்க்கப் பட வேண்டும்.சங்கராச்சாரி பிராமணரின் நலம் நாடியாக மாத்திரம் இருப்பதும் சகிக்கமுடியாதது.தமிழன் தமிழில் வழிபடும் உரிமையைக் கேட்டால் ;சங்கராச்சாரியுட்பட ;எந்தப் பிராமணனும் துள்ளவும்; கூடாது.கருணாநிதிக்கு அவர் மதத்தைப் பற்றிய அபிப்பிராயம் கூற ;சகல பாக்கியதையும்; நிறைய உண்டு.உங்களுக்கும் அதற்குப் பதிலிறுக்கச் சகல உரிமையுமுண்டு. அதைச் செய்யுங்கள்.
யோகன்
பாரிஸ்
 
Post a Comment

Links to this post:

Create a Link<< Home

This page is powered by Blogger. Isn't yours?