Saturday, April 29, 2006

 

தேர்தல் 2006 வெற்றி.. சிறிய அலசல்

தேர்தல் 2006 சிறிய அலசல்


1984/85 - ADMK/Congress won

1989 - All stood alone DMK won

1991 - ADMK/Congress won

1996 DMK/Congress(TMC) Won

2001 ADMK/Congress Won

2006 ? DMK/Congress
Logic ஆ யோசித்தால் திமுக தான் வெற்றி பெரும். என்னதான் குட்டிகரணம் அடித்தாலும் அதிமுக மிகவும் கடினம்.ஆனால் இன்று DMDK வோட்டு யாரை பாதிக்கிறது எனத்தெரியவில்லை. கேப்டனுக்கு கிடைக்கும் வோட்டு எண்ணிக்கையை பொறுத்துதான் யார் ஜெயிக்கப்போகிறார் என்பது முடிவாக போகிறது.
கூட்டி கழிச்சிப்பார்த்தா திமுக கூட்டணி தான் வெற்றி பேரும். பார்க்கலாம் என்ன ஆகப் போகுது என்று.


Comments:
1984/85க்கு முந்தைய தேர்தல் புள்ளி விபரம் எங்கே நைனா? அந்தப்படி பார்த்தால்

1977 அ.தி.மு.க.
1980 அ.தி.மு.க.
1985 அ.தி.மு.க.
1989 தி.மு.க. (அ.தி.மு.க. பிளவு பட்டிருந்தது)
1991 அ.தி.மு.க.
1996 தி.மு.க. (ஜெ. மீது பலத்த குற்றச்சாட்டுகள்)
2001 அ.தி.மு.க. (தி.மு.க. மீது பெரும் குற்றசாட்டுகள் இல்லாத நேரத்திலும்)
2006 ---> அ.தி.மு.க. மீது 96 போல பெரும் குற்றச்சாட்டுகள் இல்லை.

இப்போ சொல்லுங்க.. யாரு குட்டிக்கரணம் போடணும்னு?!
 
1980 காங்கிரஸ் கூட்டணி தோல்வி

1984 காங்கிரஸ் கூட்டணி வெற்றி

1989 காங்கிரஸ் கூட்டணி தோல்வி

1991 காங்கிரஸ் கூட்டணி வெற்றி

1996 காங்கிரஸ் கூட்டணி தோல்வி

2001 காங்கிரஸ் கூட்டணி வெற்றி

இந்த லாஜிக்படி

2006 காங்கிரஸ் கூட்டணி தோல்வி

:-)))))))))))
 
இன்னும் 10 நாள் பொறுங்கள் பார்ப்போம்.
 
மாயவரத்தான்,

1977 (ஓயாத ஊழல் குற்ற்ச்சாட்டு, அதை மறுக்கக்கூட முடியாத அளவுக்கு அடக்குமுறை/தணிக்கை, ஜனதா, கம்யூ. பிரிவு, அதிமுக, காங் கூட்டு)

1980 (கலைப்பால் எழுந்த அனுதாப அலை, திமுக, காங் சம தொகுதி உடன்பாட்டால், அதிக மந்திரிகள் வேண்டி காங் செய்த உள்குத்து, திமுகவை அறவே பிடிக்காத எம்.பி.சுப்ரமணியம் தலைமை - காங்)

1984 (தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு (ராஜீவ்), வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு (எம்.ஜி.ஆர்), இறந்தே விட்டார், பொட்டியில் இருக்கிறார் என ஊர் ஊராய் T.ராஜேந்தர் பிரசாரம் செய்ய, கடைசி நேரத்தில் ஆர்.எம். வீரப்பன் சாதுர்யமாய் எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கும் படத்தை வெளியிட, அதையும் முரசொலி கொச்சைப்படுத்தி, இறந்து போன இந்திராவுடன் சேர்த்து படத்தை வெளியிட்டு, அந்த படம் போலி என சொல்ல, மக்கள் வெகுண்டெழுந்தது)

இதுவரை எம்.ஜி.ஆர் இருந்த காலம்.
 
Post a Comment

Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?