Wednesday, May 10, 2006

 

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இணையத்தில்

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இணையத்தில் எங்கு பார்ப்பது.இணைய ரேடியோ மற்றும் தளங்களை யாருக்காவது தெரிந்தால் கூறவும். நன்றி

Friday, May 05, 2006

 

தேர்தல் பிரசார ஓட்டு

தேர்தல் பிரசாரம் செய்த கட்சித் தலைவர்கள் / தொண்டர்களும் மேடையில் முழங்கியதில்(கத்தியதில்) அனைத்துகட்சிகளும் சேர்த்து யார் அழகாக,கோபமாக,சிரிப்பு எல்லாம் கலந்த் யார் மிக நன்றாக உயிரை கொடுத்து பேசியவர்களில் முதலிடம் என நான் பார்த்த தொலைகாட்சி தொகுப்பில்(சன் மற்றும் ஜெயாவில்) இருந்து என் தனிபட்ட வாக்கு
Unfortunately விஜய்காந்த் பிரசாரத்தை பார்க்க முடியவில்லை. ஆகையால் அவரை தவிர்த்து.
1. நாஞ்சில் சம்பத்
2. வை கோ
3. கலைஞர்
4. விந்தியா
5..ஜெயலலிதா

Saturday, April 29, 2006

 

தேர்தல் 2006 வெற்றி.. சிறிய அலசல்

தேர்தல் 2006 சிறிய அலசல்


1984/85 - ADMK/Congress won

1989 - All stood alone DMK won

1991 - ADMK/Congress won

1996 DMK/Congress(TMC) Won

2001 ADMK/Congress Won

2006 ? DMK/Congress
Logic ஆ யோசித்தால் திமுக தான் வெற்றி பெரும். என்னதான் குட்டிகரணம் அடித்தாலும் அதிமுக மிகவும் கடினம்.ஆனால் இன்று DMDK வோட்டு யாரை பாதிக்கிறது எனத்தெரியவில்லை. கேப்டனுக்கு கிடைக்கும் வோட்டு எண்ணிக்கையை பொறுத்துதான் யார் ஜெயிக்கப்போகிறார் என்பது முடிவாக போகிறது.
கூட்டி கழிச்சிப்பார்த்தா திமுக கூட்டணி தான் வெற்றி பேரும். பார்க்கலாம் என்ன ஆகப் போகுது என்று.


 

ரால்ப் நெடரும், விஜய்காந்த்தும்.

ரால்ப் நெடரும், விஜய்காந்த்தும்.


அமெரிக்காவில் 200-ம் எலெக்ஷனில் புஷ்க்கும்,அல்கொருக்கும் கடும் போட்டி இறுதியில் ப்ஷ் மயிரிழையில் வென்றது எல்லோருன் அறிந்ததே. அத்தேர்தலில் ரால்ப் நெடர் என்ற சுயேச்சை வேட்பாளர் நின்று அல்கோரின் வோட்டுக்களை பிரித்திராவிட்டால் அல்கோர் மிக நிச்சயமான் விஷயம்.ஆனால் அங்கு மிக உறுதியாக அவர் பிரித்தது அல்கோரின் வோட்டுக்களை மட்டுமே.
இங்கு நம் கேப்டனுக்கு விழப்போகும் ஓட்டுக்கள் யாரை காயப்படுத்தபோகிறது எனத் தெரியவில்லை.இவருக்கு விழப்போகும் வோடு எந்தபக்கம் மிருந்து விழப்போகிறது என தெரியவில்லை.சரி சமமாக பிரிய வாய்ப்பு இல்லை.கேப்டன் கட்சி வெற்றி பெறாது என்பது எல்லோரும் அரிந்த்ததே. ஆனால் எந்த கட்சி தோற்றாலும் பழி இவர் மேல் தான் போடுவார்கள். என்பது முற்றிலும் உண்மை.

 

சோ,சுப்ரமணியசாமி கூத்துகள்.

சோ,சுப்ரமணியசாமி கூத்துகள்.

நடுநிலைவாதி என பறைசாற்றிக்கொண்டு திரிகிறார்.இவர் ஐடியா கொடுத்துத்தான் எந்த கோஷ்டி ஒன்று சேர்வது என strategy போடுவது இவர்தான். தூது செல்வதும் இவர்தான். பெரிய யோக்கியர் என ஒரு வேஷம்.
ஜெ மோசம் என ஒன்று சேர்த்து ஜெயிக்கவைத்தார். இன்று திமுக வந்தால் யாருமே தொழில் செய்யமுடியாது என பேட்டி.
தயாநிதி டாடா-வை மிரட்டியதாகவே கொள்வோம். ஆனால் ஜெ-செய்த அட்டகாசத்தை விடவா. சென்னையில் எத்தனை பேர்களின் வீடுகள் பறிபோயின. எத்தனை பேர்களின் நிலங்கள் பறி போயின.தன் தொழில் வளர்ப்பதற்காக பதவியை பயன்படுத்துவதற்கும், (இதை செய்யாதவர் எவர்) பதவியை வைத்துக்கொண்டு அராஜகம் செய்வதற்கும் வித்தியாசம் இல்லையா?
இன்று சோ ஜெவை சப்போர்ட் செய்வது. சுப்ரமணியசாமி ஜேவை மறைமுகமாக சப்போர்ட், இவர் ஜெ-வின் மீது போட்ட வழக்குகள் என்னாயிற்று. இன்று அவர்கள் போடும் பேட்டிகள் ஜெ-டிவியில்.அவரவர் களுக்கு உபயோகம் என்றால் ஏற்றுக்கொள்ளபடுவது.
அரசியலில் இதெல்லாம் சகஜமம்ப்பா? என கூறினாலும் அசிங்கங்களின் உச்சக்கட்டத்தை எட்டிகொண்டிருக்கிறோம் என்பது வேதனையாய் இருக்கிறது.

Thursday, April 27, 2006

 

விஜய்காந்தை நம்புவோமாக

உலகமே வியக்கும் ஒரு கல்யாணம். எண்ணிக்கையில்லா நகை,சொத்து. இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது. இப்படி எல்லாம் சொல்லிட்டு இன்று அம்மா அம்மா என்று எல்லோரும் கூப்பிடிவதை பார்த்தா வெட்கமாக இருக்கிறது.
எல்லோரும் சுயநிலவாதிகள்.
துக்ளக் -சோ பண்ணும் அட்டகாசத்திற்கு அளவேயில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் யாரும் தொழில் பண்ண முடியாதாம். சுப்ரமணியசாமி பண்ணும் கூத்துக்கு அளவேயில்லை. ஜெயாவின் பாசிச ஆட்சியை ஒழிப்போம் என நடைநடையாய் சென்று விட்டு அவரின் ஆட்சி பொற்காலம் என கூறுவது. தன் கணக்கு தீர்ந்தவுடன் எதிரணி சேர்ந்த விசு.என்னை அவமான படுத்தி விட்டார்கள் என கூட்டி சேரும் சரத். என் கட்சியை பெரிதாக்க கூட்டு என கும்மாளமிடம் திருமா. ஜாதிய ரீதியாக பத்திரிக்கைகள் ஒன்று சேர்ந்து சப்போர்ட். (பத்திரிக்கை காரர்களுக்கு செய்த கொடுமைகள் மறந்து போய்விட்டன) பொற்கால ஆட்சி கொடுப்பார்களாம். தங்க தமிழர்களாம்.அராஜக ஆட்சி. அரசு ஊழியர்,காஞ்சி அரஸ்ட்.
இந்த பக்கம் குடும்ப அரசியல். ஒட்டுக்காகவே கூறப்படும் திட்டங்கள். தன் குடும்பத்தை முன்னில படுத்தி கட்சியை பின் தள்ளியது. என்ன் செயதாலும் மாநில ஆட்சியை கிண்டல் செயவது . சரியான ஒத்திழையாமை. மரத்தை வெட்டி கட்சி வளர்த்த கட்சி. கோஷ்டி பூசலைத்தவிர வேரொன்றும் தெரியாத கட்சி.
ஆனால் தேர்தல் கூட்டத்திற்கு வரும் கூட்டத்தை பார்த்தால். மக்களை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. புதிய எழுச்சி வர வேண்டும் என ஆசை.ஆனால் நிறைய பேருக்கு விஜய்காந்த் மேல் நம்பிக்கையில்லை. கொடுத்துதான் பார்ப்போமே. ஒரே நம்பிக்கை,ஒரு மாற்றம் வரட்டுமே. எத்தனை காலம் தான் கழகம் என ஏமாற்றப்படவேண்டும். இவன் மட்டும் வந்து என்ன செய்திவிடுவான் என்று தெரியாமலேயே ஒதுக்கி இன்னோரு முறை கழகங்களை உட்கார் வைத்து இதே அசிங்கங்களை சந்திக்க வேண்டுமா?
ரஜினிக்கு தான் தைரியமில்லை. ஆனால் விஜ்யகாந்த் அப்படி ஒன்றும் தவறான மனிதனாக த்ரியவில்லை. மேலும் விஜய்காந்தை விட்டால் நமக்கு வேறு புதிய எழுச்சிக்கு சான்ஸே யில்லை. மீண்டும் மீண்டும் ஜெ அல்லது ஸ்டாலின் அல்லது வளர்ந்து வரும் ராமதாஸ். போதும்டா சாமி.
பகிரங்கமாக சொல்கிறேன் விஜய்காந்திற்கு ஒர் சான்ஸ் கொடுப்போமே. என்ன் கிழிப்பான் என கேட்கலாம் உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனால் இரண்டு கழகங்களை விட நன்றாக இருக்கும் என்பது அப்பட்டமான உண்மை.

Tuesday, April 25, 2006

 

சோனியா வுடன் மேடையில்

சன் டிவியில் சோனியா வுடன் மேடையில் ஒரு பக்கம் கலைஞர். ம்ருபக்கம் தயாநிதி மாறன்.
நம்ம ப.சிதம்பரம் கூட 2-வது வரிசையில்.
ஆஹா. காங்கிரஸ் மக்களுக்கு இப்படி கூட இருட்டடிக்க முடியுமா?
ம்ம்ம்....DMK த்யாநிதி முன்னெற்ற கழகம் உண்மைதான் போல.

 

கோபிசெட்டிபாளையம் JAYA TV Coverage

நான் கலைஞருக்கு வரும் தேர்தல் கூட்டத்தை பார்க்கமுடியவில்லை. (sun news channel is not coming here) .கோபிசெட்டிபாளையம் ஜெ visit-ஐ jaya tv-யில் கவர் செய்து இருந்தார்கள்.
தேர்தல் தொடங்கியதில் இருந்து அதிகமான கூட்டம் டிவியில் பார்த்தது இங்கே தான். திமுக மாநாடு கூட்டம் ஒரே ஷாட்டில் கவர் செய்து டிவியில் பார்க்க முடியவில்லை.
மிகப்பெரிய கூட்டம்.பார்த்தது கோபி -ஜெ visit தான்.
இத்தனை மக்களுக்கு வேளையில்லையா தமிழ் நாட்டில் அல்லது இங்கு நான் TV பார்ப்பது போல் மற்றவர்களுக்கு வேடிக்கைகூட்டமா? ஆனால் ஒரு சிறிய நகரத்தில் இவ்வளவு கூட்டத்தை பார்த்தது இல்லை.
கூட்டத்தில் asusual "நமது வெற்றியை நாளை சரித்திரம் பேசும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" பாட்டு.
வேறு எங்கு அ இ அ தி மு க ஜெயிக்கிறதோ இல்லையோ. கோபியின் கூட்டத்தில் இருந்து.கோபியில் அ இ அ தி மு க தான் உறுதி யான வெற்றி. (Eventhough I may not like it)

Monday, April 24, 2006

 

சாத்தியமாகுமோ?

தேர்தலில் திமுக எங்கள் முதன்மை எதிரியாக இருப்பது இதுவே கடைசி என ஜெயலலிதா கூறிய்து பற்றி ஒரு அலசல்.
தி மு க வோட்டு வங்கி நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருப்பது உண்மை தானே?
இன்று தனிப்பெரும் கட்சி என்பது அ இ அதிமுக என்பதில் சந்தேகம் இல்லை
திமுக விலிருந்து நாளுக்கு நாள் தொண்டர்கள் வெளியேறுவது தொடர்கிறதே?.
ஒரு உதாரணத்திற்கு திமுக வோட்டு வங்கி 100 பேர் என கொள்வோம்.
எம் ஜி ஆர் வெளியேறிய போது 30% போயிற்று என கொள்வோம்.
70
எம். ஜி ஆர் மறைவுக்குப் பிறகு 5% அதிகமாயிற்று என்று கொள்வோம்.
75.
வைகோ எடுத்து சென்றது 5%
70
ப ம க தனிக்கட்சியாய் ஆன போது 5% தாக்கம்.
65
கடந்த கருணாநிதி ஆட்சியின் இந்து-முஸ்லிம் கலவரத்தால் குறைந்தது 1%
64
விஜய்காந்தின் தாக்கம் 5%
59
சன் டிவியின் அதிருப்தி 3%
56
திரைப்பட துறையினரின் அதிருப்தி 1%
55
சரத் குமார், ரஜினி அதிருப்தி 0.5%
54.5
கலைஞருக்கு பிறகு நிச்சயமாக ஒரு பிலவு இருக்கும். அப்பொழுது 15% ஆவது குறையும்
40
எனக்கு தெரிந்து படித்த எந்த புது தமிழனும் திமுக மற்றும் அதிமுக வின் வோட்டு வங்கியாக சேர்ப்பதில் விருப்பம் இல்லை.
புதிதாய் சேர்ந்த்வர்களையும்,இற்ந்து போனவர்களையும் tally செய்து விட்டொமானால்.
பிற்காலத்தில் DMK கேள்வி குறி தான்.
எத்தனையோ வாய்ப்புகள் திமுக மற்றும் கலைஞருக்கு. ஆனால் உபயோக படுத்தப்படவில்லை.
1. MGR-ன் ம்றைவுக்கு பிறகு அதிமுக வின் பிளவை உபயோகப்படுத்தாதது.
2. வைகோ வெளியேற்றலை தடுத்தலை தடுத்திருக்கலாம்
3.மூப்பனார் த்மக கட்சி யை உள்ளே கொண்டு வந்திருக்க்லாம்.
4. ரஜினி ஆதரவை பிடித்து நிருத்தியிருக்கலாம்.
5. தன் கட்சியின் உண்மையான் கொள்கையை கைவிடாமல் இருந்திருக்கலாம்.
திமுக இந்த தேர்தலில் வெற்றி பேறாவிட்டால் அது காணாமல் போக மிக பெரிய வாய்ப்பு இருக்கிறது.

 

கலைஞருக்கு ஒரு கேள்வி

சமீபத்தில் இஸ்லாமிய மதத்தினை கிண்டல் செய்து ஒரு கார்ட்டூன் மிக பெரிய போரட்டத்தை எற்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே. இரு பகக நியாயங்களும் (கருத்து சுதந்திரம், மத மதிப்பு) த்ங்கள் காரணங்களை நியாயபடுத்தினா. இங்கே கலைஞ்ர் அவர்கள் மகாபாரதத்தில் இருந்து பாஞ்சாலி பாத்திரத்தை கொச்சை படுத்தி முரசொலியில் எழுதியிருந்தது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம். யாருமே இதை பொருட்படுத்த வில்லை. ஏன்? ஒரு வேளை தமிழில் எழுதியதால் யாரும் கண்டுகொள்ளவில்லையோ?. இதே கலைஞரால் ஒரு குரானிலோ அல்லது பைபிளிலிருந்தோ ஒரு வாக்கியத்தை கிண்டல் செய்து எழுத துணிச்சல் இருக்குமோ. என்ன இந்து சமுதாயத்தை கிண்டல் செய்தால் கேட்க யாருமில்லை என்ற எண்ணம் தானே? எழுத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இந்து மத இதிகாசத்தில் இருக்கும், ஒரு பாத்திரத்தை கிண்டல் செய்வது யார் என்று தான் பார்ர்க்க வேண்டும். வயதானவர்களை பார்க்கும் போது இயல்பாகவே மதிப்பு வரும். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு maturity கொடுத்திருக்கும். ஆனால் 80 வயது தமிழ் வளர்க்கும் தலைவருக்கு, குறளோவியம் எழுதிய கலைஞர் ஏன் இப்படி அவர் தரத்தை அவரே தாழ்த்திக்கொள்கிறார்?

Sunday, April 23, 2006

 

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்...
நான் நீண்ட நாள் வலைப்பதிவு வாசகன்.
வெகு நாட்களின் கனவு. இன்று என் வலைப்பூவை தொடங்குகிறேன்.
நன்றி...

This page is powered by Blogger. Isn't yours?